கவுகாத்திக்குள் வர ராகுலுக்கு மறுப்பு - போலீசாரின் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர்..!

Indian National Congress Rahul Gandhi Assam
By Karthick Jan 23, 2024 08:42 AM GMT
Report

பாரத் ஜூடோ யாத்திரையை 2-ஆம் கட்ட பாதயாத்திரையை அண்மையில் துவங்கி மேற்கொண்டு வருகின்றார் ராகுல் காந்தி.

பாரத் ஜூடோ யாத்திரை

கவுகாத்தியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரைக்கு அதன் முக்கிய வழிகள் வழியாக நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

clash-between-police-and-congress-in-guwahati

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் அரசாங்கம், நகரப்பகுதிக்குள் இல்லாமல், அதற்குப் பதிலாக கவுகாத்தி Bye- pass பகுதிகளை பயன்படுத்துமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு மோதல் ஏற்பட்டது.

ராவணன் பற்றியெல்லாம் பேச வேண்டாம் - ராகுல் காந்தியை தாக்கிய முதலமைச்சர்!

ராவணன் பற்றியெல்லாம் பேச வேண்டாம் - ராகுல் காந்தியை தாக்கிய முதலமைச்சர்!

சட்டத்தை...

காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்ப்பைத் தூண்டியதால், நகருக்குள் நுழைய யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இது குறித்து ராகுல் காந்தி, "பஜ்ரங் தள் மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோரின் பேரணிகள் இந்த வழியாக கொண்டு செல்லப்பட்டன என்று குறிப்பிட்டு,

clash-between-police-and-congress-in-guwahati

ஆனால் தங்களை மட்டும் தடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். நாங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் வலிமையானவர்கள் என்று கூறி, நாங்கள் தடுப்புகளை உடைத்துள்ளோம், ஆனால் சட்டத்தை உடைக்க மாட்டோம் என காங்கிரஸ் ஆதரவாளர்களின் கூச்சலோடு முழக்கமிட்டார்.