விரைவில் தட்கல் முறையில் சினிமா டிக்கெட்- கடம்பூர் ராஜூ
தட்கல் முறையில் சினிமா டிக்கெட்டை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தி நகரில் தமிழ்நாடு போட்டோ & வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்க 3 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ. சினிமா டிக்கெட்டுகள் அதிக விலையில் விற்கபடுவதை தடுக்கும் விதமாக தட்கல் முறையில் குறைந்த விலையில் சினிமா டிக்கெட் விற்க தமிழக அரசு தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறினார்.
புதிய படங்கள் வெளியாகியுள்ள இந்த நிலையில் அதிக விலையில் டிக்கெட் விற்கப்படுவதாக,அரசின் கவனத்திற்கு வந்ததால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.
அவ்வாறு விதிகளை மீறும் திரையரங்குகள் மீது மாவட்ட வருவாய் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.