Sunday, Jun 22, 2025

இந்த சிறுவர்கள் யாருன்னு தெரியுதா..? தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகர்கள்!

Udhayanidhi Stalin Tamil Cinema Viral Photos
By Vidhya Senthil 9 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

 உதயநிதி ஸ்டாலினுடன், நடிகர் சுந்தர் ராமு சிறு வயதில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 உதயநிதி

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழ் திரைத்துறையில் உதயநிதி ஸ்டாலின் அறிமுகமானார். அதன்பிறகு பல ஆண்டுகளாகப் பல வெற்றிப் படங்களை வழங்கி வந்தார்.

udhaynithi

பின்னர் 2012 இல் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப் படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் நடிகராக அறிமுகமானார் .நடிகராக இவர் பெரிய அளவில் திரைத்துறை வாழ்க்கையில் ஜொலிக்க வில்லை, இருப்பினும் தயாரிப்பாளராகத் தமிழ் திரைத்துறையில் கலக்கி வந்தார்.

விஜயகாந்தை கொன்றவர்களை கண்டுபிடிங்க; அடுத்து நீங்களும், ஸ்டாலின் சாரும் தான்.. - பகீர் கிளப்பும் இயக்குநர்!

விஜயகாந்தை கொன்றவர்களை கண்டுபிடிங்க; அடுத்து நீங்களும், ஸ்டாலின் சாரும் தான்.. - பகீர் கிளப்பும் இயக்குநர்!

மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி,இது கதிர்வேலன் காதல்,நண்பேன்டா, மனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல், விமர்சனம் என ரசிகர்கள் அதிக அளவில் பேசப்பட்டது.

யாருன்னு தெரியுதா..?

இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பேரனும் ஆவார்.2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் உதயநிதி தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

viral photos

அதன்பிறகு 2021-ம் ஆண்டில், சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இவர் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான "மாமன்னன்" படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன், நடிகர் சுந்தர் ராமு சிறு வயதில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், தற்பொழுது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.