சீரியலில் மாமியார் - மருமகன்.. நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவி- யார் அந்த ஜோடி?
சீரியலில் மாமியார் - மருமகனாக நடித்த ஜோடி ஒன்று நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரியல்
ஒரு காலத்தில் நடிகர்கள் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் மிகக் குறைவு. ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது.சினிமா நடிகர்களுக்கு இருக்கும் மோகமும், வருமானமும் சீரியல் நடிகர்களுக்கு உண்டு.
இந்தியாவில் சீரியல்களில் நடித்து தற்போது சினிமாவில் நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ஏராளம். பிரபலமான சிரியல்கள் ஆயிரக்கணக்கான எபிசோட்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளன. அதில் ஒன்றுதான் சக்கரவாக்கம்.
தெலுங்கு நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சில தொடர்களில் சக்கரவாக்கமும் ஒன்று.நவம்பர் 3, 2003 முதல் பிப்ரவரி 15, 2008 வரை ஜெமினி டிவியில் ஒளிபரப்பான இந்தத் தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஓடிய இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளைப் படைத்தது.
நிஜ வாழ்க்கை
இந்தத் தொடரில் ப்ரீத்தி அமீன், இந்திரனில், செல்வராஜ், கௌஷல் மண்டா, சாகர், ப்ரீத்தி நிகம், ரமாபிரபா, மதுமணி, நரசிம்ம ராஜு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் தனது கணவர் இந்திரனிலுக்கு மாமியாராக மேக்னா ராமி நடித்திருப்பார். சக்கரவாக்கம் தொடர் கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது.
ஆனால் அந்த சமயத்தில் சீரியலில் மாமியார் - மருமகனாக நடித்தவர்கள், மறு ஒளிபரப்பாகும் நேரத்தில், நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக மாறி ஆச்சரியப்படுத்தினர். 40 வயதை எட்டிய இந்த தம்பதியினருக்குக் குழந்தையில்லை. அண்மையில் 20வது திருமண நாளை இந்த தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.