போதும் டா யப்பா? மீண்டும் அதிகரிக்கும் சினிமா டிக்கெட் விலை - OTT Subscription விலையும் எகுறுது?
சினிமா டிக்கெட் விலை
சினிமா பார்ப்பது என்பது அனைவருக்குமே பிடித்தமான விஷயமாகவே இருக்கிறது. ஆனால், முன்னர் போல இப்பொது மக்கள் குடும்பம் குடும்பமாக படங்களை பார்த்து மகிழ்வது குறைந்து விட்டது.
முக்கிய முதல் காரணம், படம் போனால் சாப்பிட உடன் வருபவர்களுக்கு வாங்கி தரவேண்டும். அதன் விலை என்பது கடங்காமல் போனது தான் தற்போது பெரிய பிரச்சனையாகவே உள்ளது. அதே போல தான், டிக்கெட்டின் விலை தான் பலரை அதிரவைக்கிறது.
உயரும் விலை
இந்த நிலையிலேயே, தற்போது மீண்டும் 2% cess வரியை அதிகரிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு வந்த இடம் கர்நாடக மாநிலத்தில்.
இந்த வரி அதிகரிப்பு என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும்,சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இது குறித்தான பரிசீலனையில் இருப்பதாக தகவல் அதிகப்படியாக வெளிவந்துள்ளது.
இந்த வரி அதிகரிப்பு என்பது சினிமா டிக்கெட் விலைகளில் மட்டுமே என்பது மட்டுமின்றி OTT subscription மீதும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.