பலூனுக்குள் திரையரங்கம்...தமிழகத்திலேயே முதல் முயற்சி!! எங்கு உள்ளது தெரியுமா?

Tamil nadu India Dharmapuri
By Karthick Jul 05, 2024 04:59 AM GMT
Report

தமிழகத்தில் முதல்முறையாக பலூன் திரையரங்கம் தர்மபுரியில் திறக்கப்பட்டுள்ளது.

திரையரங்கம்

திரையரங்கில் படம் பார்ப்பது என்பது பலரும் பிடித்தமான ஒரு விஷயமாகவே உள்ளது. அதன் அடிப்படையில் பல வகையில் திரையரங்குகள் நவீன தொழில்நுட்பத்துடன் கொண்டு வரப்படுகின்றன.

balloon theatre in dharmapuri new experience

Imax, 3D, PXL screen என பல வகை வந்துவிட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் தர்மபுரியில் புதிதாக பலூன் திரையரங்கம் கட்டப்பட்டுள்ளது. அது என்னடா பலூன் திரையரங்கம் என்ற ஆற்வம் உங்களுக்கு எளிதில் எழும். தருமபுரி மாவட்டத்தின் பொம்மிடி கிராமத்தில் Balloon Modern Cinema Theatre நிறுவப்பட்டுள்ளது.

மறையும் சென்னையின் அடுத்த அடையாளம் - முடியும் 40 ஆண்டுகால பயணம்..!

மறையும் சென்னையின் அடுத்த அடையாளம் - முடியும் 40 ஆண்டுகால பயணம்..!

பலூன் திரையரங்கம் 

இதனை அதே கிராமத்தை சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவரான ரமேஷ் என்பவர் நிறுவியுள்ளார். பெரிய பலூனுக்குள் திரைப்படம் பார்த்தால் எப்படி இருக்கும், அதுவே இந்த திரையரங்கம் வடிவம். டெல்லியைச் சேர்ந்த Picture Time என்ற நிறுவனத்துடன் இணைந்து 50 சென்ட் நிலத்தில் இதை அமைத்துள்ளார் ரமேஷ்.

balloon theatre in dharmapuri new experience

கட்டுமானம் பணிகள் இல்லாமல், கன்டெய்னர் மற்றும் பெரிய ராட்சத பலூன் மூலம் திரையரங்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 140 இருக்கைகளைக் கொண்ட இந்த பலூன் திரையரங்கில், சாதாரண கட்டணமே நிர்ணயித்துள்ளது. இந்த முயற்சியானது ஜெர்மன் நாட்டின் திரையிடலாகும்.