மறையும் சென்னையின் அடுத்த அடையாளம் - முடியும் 40 ஆண்டுகால பயணம்..!
சென்னையில் பல முக்கிய திரையரங்குகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றது.
மாறும் சென்னை
சென்னையின் அடையாளம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய மாற்றங்களை கண்டு வருகின்றது. பல இடங்கள் கையகப்படுத்தப்பட்டு குடியிருப்பு இடங்களாக மாறிவருகின்றது.
சென்னையின் முக்கிய திரையரங்குகளாக இருந்த சாந்தி திரையரங்கம், மல்டிபிளெக்ஸ் அபிராமி மெகா மால் போன்றவை குடியிருப்புகளாக மாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது பிரபலமான உதயம் திரையரங்கமும் மூடப்படுகிறது. உதயம் திரையரங்கம் சென்னை அசோக் பில்லர் பகுதியில் அமைந்துள்ள முக்கிய அடையாளம் உதயம் திரையரங்கம்.
இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 திரைகள் இயங்கி வந்தன. 1983-இல் இருந்து சினிமா ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்த இந்த திரையரங்கம் தற்போது மூடப்படுகிறது.
உதயம் திரையரங்கு பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் பத்து நாட்களுக்கு முன்பு கையெழுத்தானதாக கூறப்படுகிறது. உதயம் திரையரங்கம் இருக்கும் இடத்தில் பலமாடி அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.