பள்ளிப் படிப்பை கூட முடிக்காத நடிகை.. இன்று பல கோடிக்கு அதிபதி! யார் அது?
சினிமாவில் பல நட்சத்திரங்களின் குழந்தைகள், இளம் நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.
சினிமா
பள்ளிப் படிப்பை கூட முடிக்காத நடிகை ஒருவர் இன்று பல கோடிக்கு அதிபதியாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சினிமாவில் பல நட்சத்திரங்களின் குழந்தைகள், இளம் நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் சிலருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் சிலர் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர்.
அப்படி தான் தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகை ஆலியா பட். இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், பாலிவுட்டில் கரண் ஜோகரின் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். தனது முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பாராட்டை பெற்றார்.
அதிபதி
ஆனால், அவர் 12ஆம் வகுப்பைக் கூட முடிக்கவில்லை. பள்ளிப் படிக்கும் போது நடிப்பதற்கு ஆர்வர் வந்த காட்டிவந்தார் ஆலியா பட்.முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டார்.
மேலும் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா பட்டுக்கு ராஹா கபூர் என்ற பெண் குழந்தை இருக்கிறது.
தற்போது பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஆலியா பட், தொடர்ந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். மும்பையில் விலையுயர்ந்த வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வைத்துள்ள ஆலியா பட் ,பல ஆயிரம் கோடிக்குச் சொந்தக்காரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.