Saturday, May 3, 2025

நண்பரை நம்பி சென்ற கல்லூரி மாணவி.. சீரழித்த சினிமா உதவி இயக்குனர் - அதிர்ச்சி!

Chennai Sexual harassment Erode
By Vinothini 2 years ago
Report

சினிமா உதவி இயக்குனர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால்லூரி மாணவி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர் ஜெனோவாவுடன் பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

cinema-assistant-director-sexually-harassed-girl

அவரை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் அஜித்குமார் வீட்டில் இறக்கிவிட்ட ஜெனோவா மறுநாள் வந்து அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அந்த அஜித்குமார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர், சினிமாவில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். அன்று இரவு அஜித்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு.. பெண் வங்கி மேலாளர் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் செய்த காரியம் - அதிர்ச்சி!

திருமணத்தை மீறிய உறவு.. பெண் வங்கி மேலாளர் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் செய்த காரியம் - அதிர்ச்சி!

பாலியல் தொல்லை

இந்நிலையில், அஜித்குமார் போதையில் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் அந்த பெண் ஈரோட்டில் உள்ள தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

arrest

உடனடியாக ஆலப்பாக்கம் சென்ற மதுரவாயல் போலீசார் அந்த பெண்ணை மீட்டு, அந்த உதவி இயக்குனர் அஜித்குமாரை கைது செய்துள்ளனர். மேலும், போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.