நாடு விட்டு நாடு.. 24 பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை - சிஐஏ அதிகாரி கொடுமை!
சிஐஏ அதிகாரி 24 பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
அமெரிக்கா, லா மிசா பகுதியை சேர்ந்தவர் பிரையன் ஜெப்ரி ரேமண்ட்(48). பெரு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிஐஏ அதிகாரியாக பணியாற்றியுள்ளார். பல நாடுகளில் தங்கியுள்ளார்.
அப்போது, பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்தும் வைத்துள்ளார். இதன்படி, 14 ஆண்டுகளில் இவரிடம் 24 பெண்கள் வரை சிக்கி பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்த வழக்கு எப்.பி.ஐ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டது. முன்னதாக மெக்சிகோ சிட்டி பகுதியில் இவருடைய வீட்டு பால்கனியில் நிர்வாண கோலத்தில் பெண் ஒருவர் உதவி கேட்டு கத்தியுள்ளார். அந்த வழியே சென்ற ஒருவர் இதனை பார்த்து இருக்கிறார்.
சிஐஏ அதிகாரி கைது
இதன்பின்னரே, ரேமண்டுக்கு எதிரான விசாரணை தொடங்கியுள்ளது. டிண்டர் எனப்படும் டேட்டிங் செயலி வழியே பெண்கள் பலரை தொடர்பு கொண்டு அவர்களை தன்னுடைய குடியிருப்புக்கு அழைத்து செல்வது ரேமண்டின் வழக்கமாக இருந்துள்ளது. இவர்களில் பலருக்கும், சம்பவத்தின்போது ரேமண்ட் என்ன செய்திருக்கிறார் என்பது தெரிந்திருக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த குற்ற சம்பவங்களை ரேமண்ட் ஒப்பு கொண்டுள்ளார். பின் அவற்றில் இருந்து பின்வாங்கியுள்ள அவர் குற்ற செயலில் ஈடுபடவில்லை எனவும் கூறியுள்ளார்.
2020-ல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதும் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.