திருச்சபை போதகர் செய்யக்கூடிய செயலா இது? - இளம்பெண் கதறல்!
திருச்சபை போதகர் ஒரு சிறுமியை மிரட்டி பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதகர்
வேலூர் மாவட்டம் எழிலநகர் காந்தி தெருவை சேர்ந்தவர் வினோத் ஜோஸ்வா. 40 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த கீழக்கோட்டை சின்னகுளம் பகுதியில் ஒரு திருச்சபையில் போதகராக பணியாற்றி வருகிறார்.
தொடர்ந்து இவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருச்சபையில் வைத்து போதனை வகுப்புகளும் நடத்தி வருகிறார். அப்பொழுது, கயத்தாறு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார். அவர் அங்கு நடைபெறும் வகுப்பிலும் பங்கேற்றுள்ளார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில், அந்த இளம்பெண்ணுடன் பழகிய போதகர் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அவரை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் அவரின் பெற்றோரிடம் அழுதவாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்பொழுது அந்த போதகர் கடந்த 5 வருடங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. இதனால் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர்.