58 வயதிலும் இளமை; குவியும் கேள்விகள் - ரகசியம் உடைத்த புகைப்படக் கலைஞர்!

Singapore Viral Photos
By Sumathi Jul 19, 2024 07:22 AM GMT
Report

58 வயதிலும் புகைப்படக் கலைஞர் ஒருவர் இளமையாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

58 வயதில் இளமை

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பேஷன் புகைப்படக் கலைஞர் சுவாண்டோ டேன். சொந்தமாக சுவான்டோ & ஃப்ரே என்ற ஸ்டுடியோ வைத்துள்ளார்.

chuando tan

இந்த ஸ்டுடியோவிற்கு இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்துள்ளார். அதில் 58 வயதிலும் மிகவும் இளமையாகத் தோற்றமளித்துள்ளார். இவரை இன்ஸ்டாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர்.

என் வயது தான் 45; ஆனால் உடலுக்கு 22 - இளமையாக இருக்க மாதம் ரூ.1 கோடி செலவு

என் வயது தான் 45; ஆனால் உடலுக்கு 22 - இளமையாக இருக்க மாதம் ரூ.1 கோடி செலவு

வைரல் ஃபோட்டோ

இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த பலர் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அவர், நமது உடல் மற்றும் மன நலனில் 70 சதவிகிதம் நமது உணவுமுறையே காரணம். வழக்கமான காலை உணவில் 6 வேகவைத்த முட்டைகள்.

பெர்ரிகளுடன் ஒரு அவகேடோ பழம். அரிசியுடன் கோழி இறைச்சி, வறுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் மீன் குழம்பு. அவ்வப்போது ஐஸ்கிரீம், காபி மற்றும் தேநீரைத் தவிர்த்து, நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பின், வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு அரை மணி நேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்குகிறேன். டிரெட்மில்லில் நடைபயிற்சி. தினமும் நீச்சல், வைட்டமின் சி சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.