உடலுறவு காட்சியின் போது பகவத் கீதை - சர்ச்சையான கிறிஸ்டோபர் நோலனின் மூவி!
ஓப்பன்ஹெய்மர் படம் பகவத் கீதை குறித்த காட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓப்பன்ஹெய்மர்
உலக நாடுகளின் வரலாற்றையே மாற்றி எழுதிய சம்பவத்துக்கு காரணமாக இருந்த அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஜே.ஒப்பன்ஹைய்மரின் வாழ்க்கைப் பின்னணியில் கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியுள்ள வரலாற்று ஆவணம்தான் இந்த ‘ஓப்பன்ஹைய்மர்’ திரைப்படம்.
ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இந்தப் படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகின்றன. இந்தப் படத்தில் ஜின் டாட்லாக் என்பவருடன் ஓப்பன்ஹெய்மர் உடலுறவு கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.
சர்ச்சை
அதன்பின், அவரது அலமாரியில் பகவத் கீதை இருப்பதைப் பார்த்து அதைப் பற்றி கேட்கிறார். அவருக்காக கீதையில் இருந்து கிருஷ்ணனின் வரிகளை மேற்கோள்காட்டி உலகங்களை அழிக்கும் எமனாக மாறிவிட்டேன் வேதனை தெரிவிப்பதாக காட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, உடலுறவு காட்சியில் பகவத் கீதையை காட்டுவதா என சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி விமர்சனங்கள் எழுந்து வருகிறது.