பசியின் கோர தாண்டவம்.. உணவு வாங்க முண்டியடித்த மக்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் பலி!
நைஜீரியாவில் உணவு பொட்டலங்களை வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியா
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. அங்குப் பட்டினியால் மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கப்பட்டது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.தென்மேற்கு ஓயோ மாநிலத்தில் புதன்கிழமை 35 குழந்தைகள் வரைபலியாகினர் சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் வரைபலியாகினர்.
மேலும் அபுஜாவில் தேவாலயத்தில் உடைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. இதில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.அப்போது 10 பேர் வரைபலியாகினர்.இந்த சம்பங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரியா அரசு உத்தரவிட்டுள்ளது .
67 பேர் பலி
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், நைஜீரியாவில் கொடிய நெரிசல்கள் புதிதல்ல.
பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காததால் அடிக்கடி ஏற்படுகின்றன.ஆனால் மக்கள் உயிர்வாழ வேண்டும் என்ற விரக்தியால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.