பள்ளி நிகழ்வில் நேர்ந்த சோகம் - கூட்ட நெரிசலில் 30 மாணவர்கள் பரிதாப பலி
பள்ளி நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி நிகழ்ச்சி
நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பெண்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அறக்கட்டளை சார்பில், உதவித்தொகை மற்றும் பிற பரிசுகள் வழங்குவதாக கூறி நேற்று(18.12.2024) கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
30 பேர் பலி
இதனால் நிகழ்ச்சியைக் காண ஏராளமான மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.அப்போது ததிடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவாக மாநில ஆளுநர் செய் மகிந்தே தெரிவித்துள்ளார்.