கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்ல நிதி; எப்படி விண்ணப்பிக்கலாம்? அரசு அறிவிப்பு!

Government of Tamil Nadu Israel Egypt
By Sumathi Mar 16, 2024 05:40 AM GMT
Report

கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான நிதி குறித்து தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புனிதப் பயணம் 

தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக (இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான்)

bethlehem

தமிழக அரசால் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்புனிதப் பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும்

அண்ணாமலைக்கு பைபிள் பரிசு; உடனே அவர் செய்த காரியத்தை பாருங்க - வைரல் வீடியோ!

அண்ணாமலைக்கு பைபிள் பரிசு; உடனே அவர் செய்த காரியத்தை பாருங்க - வைரல் வீடியோ!

நிதி பெற விண்ணப்பம்

கிறிஸ்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக நிதியுதவி வழங்கும் திட்டத்தினை ஏற்கனவே உள்ள நடைமுறைகளுடன் ECS முறையில் பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

tn govt

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.