ஜெரூசலேம் புனிதப் பயணத்திற்கு இனி ரூ.60,000 மானியம்: தமிழக அரசின் அறிவிப்பு
ஜெரூசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் அருட்சகோதரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் சிறுபான்மையினருக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்தார்.
அதன்படி, ஜெரூசலேம் புதிதப் பயணத்திற்கான மானியம் ரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்காளுக்கு நல வாரியம் அமைக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவிகளுக்கு பண்டிகை நாள்களில் சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.