பாத்ரூம் நீரில் காபி - சிறையில் அனுபவித்த கொடுமைகளை பகிர்ந்து கதறிய நடிகை!
சிறையில் அனுபவித்த சிரமங்கள் குறித்து நடிகை கிரிசான் பெரெய்ரா பகிர்ந்துள்ளார்.
கிரிசான் பெரெய்ரா
பாலிவுட் நடிகை கிரிசான் பெரெய்ரா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அரபு அமீரகம் சென்றார். அங்கு அவர் கொண்டு சென்ற விருது ஒன்றில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால், கைது செய்யப்பட்டார்.
3 வார காலம் சிறையில் இருந்த நடிகை குற்றம் செய்யவில்லை என்பது நிரூபனமானதால் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, விருதில் போதைப்பொருள் மறைத்து வைத்தது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஆண்டனி பால், ரவி ஆகியோர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வேதனை
இந்நிலையில், சிறையில் இருந்த அனுபவங்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அதில், கழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் தனக்காக காபி தயாரித்ததாகவும்,
சலவை பவுடரைக் கொண்டு தனது தலைமுடியை அலசிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் அவர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.