முகத்தில் உள்ள கருமை நீங்கனுமா?அப்போ இந்த சாக்லேட் face pack ட்ரை பண்ணுங்க!
பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுக்க இந்த டார்க் சாக்லேட் பேக்- ஐ பயன்படுத்தலாம்.
முகத்தில் கருமை
பொதுவாக கோடை காலத்தில் அதிக வெப்பம் தாக்கம் இருப்பதால் நம் ஆரோக்கியம் மற்றும் சருமம் பாதிக்கப்படும். கொஞ்சம் நேரம் வெளியில் இருந்தால் போதும் உடனே சன் டான் ஆகிவிடும். குறிப்பாக, சூரியன், தூசி மற்றும் மண் சருமத்தில் தங்கிவிடுகிறது.
இதன் காரணமாக தோல் வறண்டு மந்தமான மற்றும் உயிரற்றதாக மாறுகிறது.இதனை தடுக்க நாம் அவ்வப்போது சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும்.
டார்க் சாக்லேட் மற்றும் இலவங்கப்பட்டை
டார்க் சாக்லேட் பவுடர் இரண்டு டீஸ்பூன் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகிய இரண்டையும் அரை டீஸ்பூன் தேன்னுடன் நன்கு கலந்து முகத்தில் பூசுங்கள்.
ஒரு அரை மணி நேரம் கழித்து பேக் காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
டார்க் சாக்லேட் மற்றும் வாழைப்பழம்
ஒரு வாழை பழத்தை நன்றாக மசித்து, அதில் ஒரு ஸ்பூன் டார்க் சாக்லேட் பவுடரை சேர்த்து நன்கு கலந்த பின்
அவற்றை முகத்தில் தடவி அரை மணி நேரம் காயவிட்டு பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
டார்க் சாக்லேட் மற்றும் பிரவுன் சுகர்
டார்க் சாக்லேட் பவுடர் மற்றும் பிரவுன் சர்க்கரை ஆகிய ஆகியவற்றை இரண்டு டீஸ்பூன் சேர்த்தது ஒன்றாக நன்கு கலந்து கொள்ள வேண்டும், அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடவும்.
பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
டார்க் சாக்லேட் மற்றும் காபி பவுடர்
டார்க் சாக்லேட் பவுடர் மற்றும் காபி தூள் ஆகியவற்றை இரண்டு டீஸ்பூன் கலந்து பேக் பதத்திற்கு ஆகிய பிறகு முகம் மற்றும் கழுத்தில் தடவி
நன்கு காய்ந்ததும் நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
டார்க் சாக்லேட் மற்றும் ஓட்ஸ்
இரண்டு டீஸ்பூன் டார்க் சாக்லேட் பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் அரைத்த ஓட்ஸ் பவுடர் இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து மசாஜ் செய்ய வேண்டும்.
சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு, நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.