சூரியன் மறைவு-சந்திரன் உதயம்; அதுவும் ஒரே நேரத்தில்.. இந்த அபூர்வ காட்சி எங்கு தெரியுமா?
ஒரே நேரத்தில் சூரியன் மறைவு-சந்திரன் உதயம் நடைபெறவுள்ளது.
சித்ரா பெளர்ணமி
சித்திரை மாதம் பெளர்ணமி நாளன்று, சித்ரா பெளர்ணமி கொண்டாடப்படுவது வழக்கம். அன்று சூரியன் மறைவும், சந்திரன் உதயமாகும் காட்சியும் ஒரு சேர நடக்கும்.
அதனை கன்னியாகுமரியில் காணலாம். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும்.
அபூர்ப காட்சி
இந்தக் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதன்போது, மாலையில் சூரியன் மேற்கு பகுதியில் உள்ள அரபிக்கடலில் பந்து போன்ற வடிவத்தில் கடலுக்குள் மறையும்.
அப்போது கிழக்கில் உள்ள வங்கக்கடல் பகுதியில் சந்திரன் வட்ட வடிவத்தில் ஒளி வெள்ளத்தில் காணப்படும்.
இதனை முக்கடல் சங்கமம் கடற்கரை மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை ஆகிய இடங்களில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.