தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? ராசிக்கான பலன்கள் இதோ!

Astrology 12 Rasi Palangal Tamil
By Sumathi Apr 09, 2024 05:37 AM GMT
Report

சித்திரை மாதத்திற்கான ராசி பலன்களை குறித்து பார்க்கலாம்.

தற்போது நடைபெற்று வரும் சோபகிருது வருடம் முடிவடைந்து குரோதி வருடம் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கமான சித்திரை மாதத்தில் 12 ராசிக்கார்களுக்கான பலன்களை பார்ப்போம். 

tamil-puthandu-rasi-palan

மேஷம்

ஏதோ ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் நீங்கள் மறைந்து இருந்தாலும் உங்களுடைய திறமைகளைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். பெரிய அதிசயங்களை காண்பீர்கள். சுப காரியங்களில் பங்கெடுப்பீர்கள். அதிகார பதவிகள் தேடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. 

ரிஷபம்

புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று இருக்கும் உங்களுக்கு இல்லம் தேடி வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு. மே ஒன்றாம் தேதிக்கு பிறகு உங்களுக்கான பொற்காலம் ஆரம்பம்.

மிதுனம்

முதல் திருமணம் வழக்கில் இருப்பவர்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெறும். அதிகப்படியான பொருட்கள் வீடு வந்து சேரும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் விலகும்.

கடகம்

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழிலில் பல மடங்கு லாபம் உண்டாகும்.அரசாங்கத்தின் மூலம் நன்மை உண்டாகும். பெருமூச்சுவிட்டு நன்மைகளை அனுபவிப்பீர்கள். மேற்படிப்பு சாத்தியமாகும்.

 சிம்மம்

திடீர் அதிர்ஷ்டங்கள் தன வரவு உண்டாகும். வேலை பளு குறையும். நீங்கள் செய்யும் வேலைகளில் பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும். சிக்கல்கள் தீரும் காலமாக அமையும்.

கன்னி

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நாள்பட்ட வியாதிகளுக்கு தீர்வு ஏற்படப்போகிறது. கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கில் வெற்றி உண்டாகும். வாழ்க்கையில் எதை இழந்தோம் என்பதை பற்றி சிந்திக்கும் நேரம் இது.

 துலாம்

திருமண காரியங்களில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும். வியாபாரத்தால் நல்ல ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். வீட்டில் சுப காரியம் உண்டு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

 விருச்சிகம்

வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழிலில் ஏற்றம் உண்டு. எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். நோய்களுக்கு கூட விடுதலை உண்டாகும். ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் நினைத்த வாழ்க்கை வாழலாம்.

 தனுசு

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும். மனம் விரும்பிய மணவாழ்க்கை உண்டு. எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அனைத்து காரியங்களும் சுமூகமாக நடைபெறும்.

மகரம்

நீண்ட தூர பிரயாணம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திடீர் பணவரவு உண்டாகும். அதிர்ஷ்டமும் உங்களுக்கு கைகொடுக்கும். படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

 கும்பம்

திருமண பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழிற் ஸ்தானத்தில் நல்ல லாபம் உண்டு. எதிர்பார்த்த தனவரவு உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

மீனம்

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மரியாதை கூடும். குடும்பத்தில் சில சச்சரவுகள் இருந்தாலும் பெரிய அளவு அது உங்களை பாதிக்காது. உஷ்ணம் மூலம் ஏற்படக்கூடிய நோய்களுக்கு கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.  

மதுரை சித்திரை திருவிழா.. செயற்கையான மண்டபத்தில் காட்சி கொடுக்கவுள்ளார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழா.. செயற்கையான மண்டபத்தில் காட்சி கொடுக்கவுள்ளார் கள்ளழகர்