மகள் வயசு.. ஏன் இவ்வளவு மோகம் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சர்ச்சை நடிகை
மகள் வயது நடிகை மீது ஏன் மோகம் என சிரஞ்சீவியை நடிகை ஸ்ரீரெட்டி சாடியுள்ளார்.
சிரஞ்சீவி
தமிழில் அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படமானது தெலுங்கில் ‘போலோ ஷங்கர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி ஆகஸ்ட் 10-ல் வெளியாகியுள்ளது. இதில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இதன் ப்ரீ-ரிலீஸ் விழாவின் போது, பேசிய சிரஞ்சீவி “இந்தப் படத்தில் மட்டும் தான் கீர்த்தி எனக்கு தங்கை. அடுத்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பார்” என நகைச்சுவையாகக் கூறினார்.
சாடிய ஸ்ரீரெட்டி
இதற்கு நடிகை ஸ்ரீரெட்டி, “சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். தன் மகள் வயதுள்ள நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார். லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இப்படியான ஜோக்குகளை எப்படிச் சொல்ல முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை சொல்லி கவனம் ஈர்த்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் இயக்குநர்கள் சுந்தர்.சி, முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மீதும் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீதும் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil