அவர் ஓரினச்சேர்க்கையாளர்: சமந்தா விவாகரத்து பற்றி பிரபல நடிகை சர்ச்சை பேச்சு
சமந்தா விவகாரத்தில் சிக்கியிருக்கும் ஆடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கர் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார்.
ஆடை வடிவமைப்பாளரான ப்ரீத்தம் ஜுகல்கரால் சமந்தா, நாக சைதன்யா பிரிய வாய்ப்பே இல்லை என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
சமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் சமந்தாவுக்கும், ஆடை வடிவமைப்பாளரான ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பும் விவாகரத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது.
இது வெறும் வதந்தியே என்று சமந்தா சமூக வலைதளத்தில் தெரிவித்தார். சமந்தாவை நான் ஜிஜி என்று தான் அழைப்பேன்.
வட இந்தியாவில் ஜிஜி என்றால் அக்கா என்று அர்த்தம். எனக்கும், சமந்தாவுக்கும் இடையேயானது எத்தகைய உறவு என்பது நாக சைதன்யாவுக்கு நன்கு தெரியும்.
அப்படி இருந்தும் அவர் இதுவரை அமைதியாக இருப்பது ஏன் என தெரியவில்லை என்று ப்ரீத்தம் ஜுகல்கர் தெரிவித்தார். ப்ரீத்தம் விளக்கம் அளித்தும் கள்ளத்தொர்பு பேச்சு அடங்கவில்லை.
இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன ஸ்ரீரெட்டி சமந்தா விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார். ப்ரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.
அவரால் சமந்தாவுக்கு விவாகரத்து கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. பேசுபவர்கள் பேசட்டும் என்று சமந்தா தன் கெரியரில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்.
அவர் இரண்டு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இரண்டு படங்களுமே தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது. இது தவிர்த்து இந்தி படம் ஒன்றில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.