அடுத்த செல்பி சர்ச்சை - ஆசையாக வந்த ரசிகர்...மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட சிரஞ்சீவி - வலுக்கும் கண்டனம்!!

Chiranjeevi Nagarjuna
By Karthick Aug 01, 2024 03:30 AM GMT
Report

செல்பி சர்ச்சைகள் தொடர்ந்து அவ்வப்போது சினிமா நட்சத்திரங்களை பிடித்து கொள்கிறது.

செல்பி

அதில் மறக்கவே முடியாதவர் என்றால் அது சிவகுமார் தான். ஆவேசமாக அவர் ரசிகரின் போனை தட்டிவிட்டு சென்றது தொடர்பான வீடியோ இன்றளவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakumar - Nagarjuna selfie

அதனை தொடர்ந்து, நடிகர் நாகார்ஜூனா அண்மையில் இது போன்ற சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்தார். விமான நிலையத்தில் செல்பி எடுக்க வந்த ரசிகரை அவர் தள்ளிவிட்டு சென்றார்.

போட்டோ எடுக்க வந்த முதியவர்...தரதரவென இழுத்து வீசிய பவுன்சர் - கண்டுக்காமல் சென்ற நாகார்ஜூனா

போட்டோ எடுக்க வந்த முதியவர்...தரதரவென இழுத்து வீசிய பவுன்சர் - கண்டுக்காமல் சென்ற நாகார்ஜூனா

தள்ளவிட்டு..

இவர்களை மட்டும் ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், அந்த சர்ச்சைகள் அந்தளவிற்கு பேமஸ். இவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

Chiranjeevi selfie issue

விமான நிலையத்தில் சிரஞ்சீவியை கண்ட ஊழியர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால், சிரஞ்சீவி அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறார். மீண்டும் அவரை பின்தொடர்ந்து ஊழியர் செல்பி எடுக்க முற்பட, அப்போது அவரின் முதுகில் கைவைத்து சற்று தள்ளிவிட்டு செல்கிறார் சிரஞ்சீவி.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரிய வைரலாகி இருக்கிறது. தெலுங்கு மீடியாக்களும் சிரஞ்சீவி மீது விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம், கலைத்து பயணம் மேற்கொண்டு வருபவர்களை இவ்வாறு தொந்தரவு செய்யலாமா? என்றும் சிலர் வினவுகிறார்கள்.