போட்டோ எடுக்க வந்த முதியவர்...தரதரவென இழுத்து வீசிய பவுன்சர் - கண்டுக்காமல் சென்ற நாகார்ஜூனா

Actors Nagarjuna
By Karthick Jun 24, 2024 05:28 AM GMT
Report

நடிகர்களின் பவுஞ்சர்கள் சில நேரங்களில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றன.

பவுன்சர் சேட்டை

நடிகர்களை பொதுவெளியில் பார்த்தால், கண்டவுடனே மக்கள் தங்களின் அபிமானத்தை வெளிப்படுத்தியும், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ளும் தங்களது நோக்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

shahrukh khan with bouncers

அப்படி நடக்கும் சில நிகழ்வுகளில் பொதுமக்களிடம் இருந்து நட்சத்திரங்களை காக்கும் வகையில் செயல்படும் பவுன்சர்கள் சற்று எதிர்பாராத விதமாகவே நடந்து கொண்டு விடுகிறார்கள்.

எல்லை மீறிய தனுஷ்...ஆர்த்தி ஜெயம் ரவியை பிரிய காரணம் இது தான்!! பிரபலம் பகீர் தகவல்

எல்லை மீறிய தனுஷ்...ஆர்த்தி ஜெயம் ரவியை பிரிய காரணம் இது தான்!! பிரபலம் பகீர் தகவல்

இதற்கு சில நேரங்களில் பொதுமக்களும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறார்கள். அதே நேரத்தில், விமர்சனம் என்பது நட்சத்திரங்களின் மேல் அதிகளவில் விழுந்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான், அண்மையில் நடந்துள்ளது.

நாகார்ஜூனா சம்பவம்

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா வந்த போது, அவரை காண முதியவர் ஒருவர் ஒருவர் முற்பட அவரை பவுன்சர் தரதரவென இழுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றார்.

Nagarjuna bouncer old man incident

இதை நாகார்ஜுனா பார்க்காமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நாகார்ஜூனா கண்ணில்பட அவர் பகிரங்கமாக இதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.