22 கோடி பங்களா - Chatered Flight!! இந்த தென்னிந்திய நடிகரின் சொத்து மதிப்பு கேட்ட அசந்துருவீங்க
திரைப்பட நட்சத்திரங்கள் சொத்துமதிப்பு எப்போதும் மக்களை தலைசுற்றவைக்கும்.
சம்பளம்
தற்போது தென்னிந்தியாவில் ஒரு படத்திற்கு பல நடிகர்களும் 100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். அது அவர்களின் மார்க்கெட் பற்றியது என்றாலும், படத்தின் பாதி பட்ஜெட் இதற்கே செலவாகிறது.
தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர்கள் தான் பெரும்பாலும் 100 கோடியை நெருங்கி சம்பளம் வாங்குகிறார்கள். மலையாள சினிமாவில் தற்போதும் பெரிய ஹீரோக்களின் பட மொத்த பட்ஜெட் 10 முதல் 20'குள் தான் இருக்கிறது.
அதே நேரத்தில் கன்னட திரையுலகம் தற்போது தான் வளர்ச்சியடைந்து வருவதால், அவர்களும் அம்மாதிரியான சம்பளத்தை பெறுவதில்லை. இந்த சூழலில் தற்போது, தென்னிந்தியாவில் ரஜினி, விஜய், பிரபாஸை மிஞ்சிய சொத்து மதிப்பை கொண்ட நடிகரின் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
1980-களில் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கிய சிரஞ்சீவி தற்போது இந்தியா முழுவதிலும் பிரபலமான பெரிய ஸ்டாராக இருக்கின்றார். வரிசையாக மெகா ஹிட் படங்களில் நடித்த ரஜினி, இந்தியாவிலேயே முதல் முறை 1 கோடி சம்பளம் பெற்ற நடிகர்.
ஒரு கட்டத்தில் இந்திய சினிமாவில் அமிதாப் பச்சனை மிஞ்சிய நடிகராக இருந்த சிரஞ்சீவி பின்னர் அரசியல் நோக்கி பயணிக்க துவங்கி, நடுவில் 8 வருடங்கள் கேப் விட்டார்.
தற்போது மீண்டும் படங்களுக்கு திரும்பியுள்ள அவர், விஸ்வம்பரா என்ற மெகா பட்ஜெட் fantasy படத்தில் நடித்து வருகிறார்.
சிரஞ்சீவின் சொத்து மதிப்பு தான் ரூ.1650 கோடி என 2022 ஆம் ஆண்டில் தகவல் வெளியாகியது. இது ரஜினி, விஜய்யை காட்டிலும் அதிகம். இவரின் சொத்தில் 22 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா, விலையுர்ந்த கார்கள், தனியாக சார்ட்டரேட் Flight போன்றவையும் அடங்கும்.