24 வயசு பசங்க அம்மா ரோல்'னு கூப்பிட்டு அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க - 48 வயது நடிகை வேதனை

Tamil Cinema Tamil Actress
By Karthick May 02, 2024 01:15 PM GMT
Report

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 1991-ஆம் ஆண்டு ஒயிலாட்டம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா. அதே வருடம் மலையாளத்தில் தனம் என்ற படத்தில் அறிமுகமானவர், அடுத்தடுத்து மலையாள படங்களில் நடித்தார்.

actress charmila

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட மொழி படங்களில் நடித்துள்ள ஷர்மிளா, மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 38 படங்களில் நடித்துள்ளார். பின்னர், சின்னத்திரையில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், ஜில்லுனு ஒரு சந்திப்பு என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார் ஷர்மிளா.

சதா அந்த பழக்கத்திற்கு அடிமை - அதனால் தான் சான்ஸ் கூட போச்சு !! போட்டுடைத்த பிரபலம்

சதா அந்த பழக்கத்திற்கு அடிமை - அதனால் தான் சான்ஸ் கூட போச்சு !! போட்டுடைத்த பிரபலம்

இவர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான "இவன் வேற மாதிரி" படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள், ஒரு படத்தில் அம்மா ரோல் இருக்கிறது என்று என்னை அழைத்தார்கள்.

actress charmila emotional

நானும் அங்கு சென்றேன். முதலில் என்னிடம் மரியாதையாக தான் பேசினார்கள். ஆனால் ஒரு நாள் என்னிடம் அவர்கள், எங்கள் மூவரில் ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும் என்னிடம் சொன்னார்கள். நான் அப்போது அங்கு இருந்து வந்துவிட்டேன்" என்று ஷர்மிளா தெரிவித்துள்ளார்.