இளையராஜா சொன்ன வார்த்தைக்காக இவ்வளவு பெரிய தியாகமா? - சின்னக்குயில் சித்ரா பேட்டி!
இசையமைப்பாளர் இளையராஜா கேட்டதுக்காக சின்னக்குயில் சித்ரா தியாகம் செய்தது குறித்து பேட்டியளித்துள்ளார்.
சின்னக்குயில் சித்ரா
தென்னிந்திய சினிமாவில் காதல், மெலடி, சோகம், தெய்வீகம் என பலவிதமான பாடல்களையும் பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த பின்னணி பாடகி சித்ரா. இவர் "சின்னகுயில் சித்ரா" என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவர் 1985-ம் ஆண்டு வெளியான "சிந்து பைரவி" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் ஒரு சிந்து" என்ற பாடல் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். மேலும், இவர் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.
பேட்டி
இந்நிலையில், பிரபல யூட்யூப் சேனலுக்கு இவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "சிந்து பைரவி படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்" என்ற பாடலை நான் பாட முடியாது என்று சொல்லல, என்னை "நான் ஒரு சிந்து" என்ற பாட்டுக்கு தான் இளையராஜா சார் கூப்ட்டு இருந்தாரு.
ஆனா காலையில் அந்த பாடலை நான் பாடி முடிச்சிட்டேன். அப்புறம் மாலையில் எங்க அப்பா ட்ரெயின் புக் பண்ணி இருந்தார். அதனால நாங்க கிளம்பிட்டு இருந்தப்போ ராஜா சார் இன்னொரு பாட்டு இருக்கு அதையும் பாடிட்டு போக முடியுமான்னு கேட்டார்.
அப்போ அப்பா எனக்கு நாளைக்கு எம்.ஏ முதலாம் ஆண்டு எக்ஸாம் இருக்குன்னு சொன்னார். அப்போ ராஜா சார் அதெல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம் இப்போ இதுல அதைவிட அதிகாமா வரும் என்றார். ராஜா சார் சொல்லும்போது தவிர்க்க முடியல.
அந்த பாட்டை பாடிட்டு போனேன். அதனால அடுத்த நாள் எம்.ஏ எக்ஸாம் எழுதல. ஆனா அப்பா அந்த எக்ஸாம் கண்டிப்பா எழுதணும்னு சொன்னாரு. ஆனா நான் கொஞ்சம் சோம்பேறி என்பதால் அந்த எக்ஸாம் எழுதல" என்று எப்பொழுதும் போல் ஸ்வீட்டாக
கூறியுள்ளார்.