பிரபல பாடகி சித்ராவை திட்டிய இளையராஜா - என்ன காரணம்?
தமிழ் சினிமாவின் இசைஞானி என்றழைக்கப்படுபவர் இளையராஜா இவரின் இசைக்கு கேட்காதோர் எவறும் இல்லை அந்த அளவிற்கு இவரின் இசை பட்டித்தொட்டி எங்கும் பரவி இருக்கும். மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமோ அந்த அளவிற்கு பல சர்ச்சைகளுக்கும் சொந்தகாரர் ஆவார்.
மனம் திறந்த சின்னக்குயில் சித்ரா
இந்த நிலையில் பிரபல பாடகி சித்ராவை இளையராஜா கடுமையாக திட்டிய சம்பவத்தின் பின்னணிக்கான காரணம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சின்னக்குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஒரியா, குஜராத்தி என அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார்.
இந்த நிலையில், சித்ரா பேட்டி ஒன்றில் நான் பாடகியாக சினிமாவுலகில் நுழைந்த ஆரம்பத்தில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக பாடலை பாட ஐடியாக்களை கொடுத்தார்கள்.
இளையராஜா திட்டியதற்கு காரணம் என்ன?
நான் பாடும் போது ஒரு தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் பாட வாய்ப்பு வந்தது.
அந்த இசையில் முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிட்டு கிளம்பிவிட்டார். நான் அப்படி சொல்ல முடியாது என்ன செய்வதென்று யோசித்தேன்.ஆனால் தேவா சார் அமைதியானவர்.
அதனால் அவரிடம் சென்று இந்த ஒரு லைன் மட்டும் சென்று தர முடியுமா சார்? ரொம்ப வல்கராக இருக்கிறது என்று சொன்னேன்.
அவரும் சரிமா மாற்றி தர முயற்சி செய்கிறேன்.இன்றைக்கு இதை எடுக்க வேண்டாம் இன்னொரு நாள் நான் சொல்றேன் என்றார்.