பில்கிஸ் பானு வழக்கு; இதுதான் இந்திய ரேப் கல்ச்சர் - கொந்தளித்த பாடகி சின்மயி!
பிகிஸ் பானு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு பரோல் வழங்கப்பட்டதற்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகிஸ் பானு வழக்கு
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவரது 3 வயது குழந்தை உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் தொடர்பான 11 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு 2008-ம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், குஜராத் அரசு தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. என கூறி குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து, அடுத்த 2 வாரங்களுக்குள் அவர்களை சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.

விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி மற்றும் குழந்தைகள்.. குடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்க - ஷாக் கொடுத்த டுவீட்!
சின்மயி கண்டனம்
இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் பாய் சந்தனா, அவரது சகோதரியின் மகன் திருமணத்தில் கலந்துக்கொள்ள வேண்டி குஜராத் உயர் நீதிமன்றத்தில் 10 நாள் பரோல் கேட்டு கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பரோல் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான பிரதீப் மோதியா தனது மாமனாரின் இறப்புக்காக கடந்த வாரம் பரோலில் வெளியே வந்தார்.
இந்த வழக்கின் குற்றவாளிகள் அடுத்தடுத்து பரோலில் வெளியே வந்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாடகி சின்மயி தனது கண்டனத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில்," கல்யாணம், கருமாதி, பிறந்த நாள்னு ஊர்ல இருக்க கன்விக்ட் செய்யப்பட்ட ரேபிஸ்ட்க்கு பரோல், ஓ பரோல் தான். இது தான் இந்திய ரேப் கல்ச்சர்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.