கன்னி பெண்தான் வேண்டுமா? கல்யாணத்திற்கு முன்பே உடலுறவு கொள்ளாதீர்கள் - விளாசிய சின்மயி

Instagram Relationship Chinmayi
By Sumathi Jan 03, 2025 12:30 PM GMT
Report

பாடகி சின்மயி எக்ஸ் தள பதிவு ஒன்றுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஆணுறை விற்பனை

எக்ஸ் தள பயனர் ஒருவர், "நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார்.

chinmayi

நேற்று இரவில் பிளிங்கிட்டில் மட்டும் 1.2 லட்சம் லட்சம் மற்ற இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சந்தையில் 1 கோடி ஆணுறை பாக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கும். இந்த தலைமுறையில் கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அதிர்ஷ்டம் ஆகும்" எனப் பதிவிட்டிருந்தார்.

மீனாவிடம் சில்மிஷம்; விளாசிய விஜயகாந்த் - போட்டுடைத்த தயாரிப்பாளர்

மீனாவிடம் சில்மிஷம்; விளாசிய விஜயகாந்த் - போட்டுடைத்த தயாரிப்பாளர்

சின்மயி பதிலடி

இதனை பார்த்த பாடகி சின்மயி, அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு கன்னிப் பெண்கள் வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆடு, நாய் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்வதற்கு ஆணுறைகளை வாங்கும் வரையில், ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும்.

மேலும் உங்கள் சகோதரர்கள் மற்றும் ஆண் நண்பர்களிடம் திருமணம் வரை உடலுறவு கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்" என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.