திருமணத்திற்கு முன்பே லிவிங்; தாலி இதனால்தான் போட்டிருக்கிறேன் - கீர்த்தி பளீச்!
காதல் வாழ்க்கை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின் இவர் நடித்த பேபி ஜான் பாலிவுட் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர், ஜனவரி இறுதிவரை தாலியை கழட்டி மாற்றுவதற்கான நல்ல நாள் இல்லை. எனவே அந்த நாள் வரை நான் மஞ்சள் கயிறுடன் தாலி அணிவேன். சிலர் புரொமோஷனல் நிகழ்ச்சிக்கு வரும் மாடர்டன் உடைகளுடன் இதை அணிந்திருப்பது தேவையில்லை என கூறியதை கேள்விப்பட்டேன்.
லிவிங் ரிலேஷன்ஷிப்
ஆனால் மஞ்சள் கயிறுடன் கட்டப்பட்டிருக்கும் தாலி உங்களது மார்பை ஒட்டி இருக்க வேண்டும். இது மங்களகரமானது மட்டுமல்லாமல் சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. தாலியை தங்க செயினுடன் மாற்றிய பிறகு வெளியே தெரியாதவாறு இருக்கும். இருப்பினும் மாடர்ன் உடையுடன் மஞ்சள் கயிறு காம்பினேஷனின் என்னை பார்க்க மிகவும் ஹாட்டாக இருந்ததாக பலர் கூறியதை பார்த்தேன்.
இது மகிழ்ச்சி அளித்தது. திருமணம் என்கிற கனவு நனவாகிய அந்த தருணம், மனம் நிறைவாக இருந்ததோடு, உணர்வுபூர்வமாக இருந்தேன். நான் ப்ளஸ் 2 படிக்கும்போது இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கினோம். அவர் என்னைவிட 7 வயது பெரியவர். கத்தாரில் வேலை செய்து கொண்டிருந்தார்.
எங்களது ரிலேஷன்ஷிப் ஆறு ஆண்டுகள் வரை நீடித்தது. கொரோனா காலகட்டத்தில் இருவரும் லிவிங்கில் இருந்தோம். எனது சினிமா கேரியருக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவர் யாராவது அதிர்ஷ்டசாலி என்று சொல்வதை காட்டிலும், நான் தான் அவரை மணமுடித்தில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.