காரமான உணவு: தொடர் இருமலால் பெண்ணுக்கு எலும்பு முறிவு - அதிர்ச்சி!

China
By Sumathi Dec 08, 2022 09:18 AM GMT
Report

காரமான உணவை சாப்பிட்டு வந்த இருமலால், பெண்ணின் 4 விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.

ஓவர் காரம்

சீனா, ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹுவாங். இந்தப் பெண் காரமான உணவை உண்டதால் அதிக இருமல் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் இருமலால் 4 விலா எலும்புகளில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு எந்தவித வலியும் தெரியாத நிலையில்,

காரமான உணவு: தொடர் இருமலால் பெண்ணுக்கு எலும்பு முறிவு - அதிர்ச்சி! | Chinese Woman Break Her Ribs By Spicy Food

தொடர்ந்து பேச முடியாமல், மூச்சு விடும் போது வலியை உணர்ந்துள்ளார். எனவே, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எலும்பு முறிவு 

அதில், அவரது நான்கு விலா எலும்புகள் முறிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவரது மார்பகப் பகுதியில் ஒரு மாதத்திற்குக் கட்டுப் போட்டு ஓய்வெடுத்தால் மட்டுமே அவர் குணமடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண், 171 சென்ட்டிமீட்டர் உயரமும், 57 கிலோகிராம் எடையும் கொண்டவர். அவரது உடல் மெலிந்து விலா எலும்புகள் வெளியில் தெரியும் அளவிற்கு பலமில்லாமல் காணப்படுவாராம். எனவே அதுதான், இருமலுக்கே தாங்காமல் அவரது விலா எலும்புகள் முறிய முக்கியக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, அவர் உடற்பயிற்சிகள் செய்து உடலை பலமாகவும், திடமாகவும் மாற்றப் போகிறாராம்.