தங்கத்தை மிஞ்சும் விலை - மூலிகைக்காக இந்தியாவுக்குள் நுழையும் சீன வீரர்கள்!
இந்தியப் பகுதிகளில் சீன ராணுவம் எதற்காக அத்துமீறி நுழைகிறது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சீன ராணுவம்
சுமார் 200க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்த நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து அவர்களை விரட்டியடித்தது. கடந்த சில ஆண்டுகளில் சீன ராணுவம் இப்படிப் பல முறை அத்துமீறி இந்தியப் பகுதிகளில் நுழைந்துள்ளது.

இந்நிலையில், இந்தோ - பசிபிக் தகவல் தொடர்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கார்டிசெப்ஸ் பூஞ்சையின் மதிப்பு 1072.50 மில்லியன் டாலர். சீனாவில் இவை தங்கத்தைவிட விலை மதிப்பு மிக்கவை.
கார்டிசெப்ஸ் பூஞ்சை
இது ஹிமாலய பகுதிகளிலும், தென்மேற்கு சீனாவின் கிங்காய் - திபெத் பகுதிகளிலும் அதிக அளவில் காணப்படுகிறது. சீனாவின் நடுத்தர வர்க்கத்தில் இந்த பூஞ்சை சிறுநீரகக் கோளாறு முதல் ஆண்மைக் குறைவு வரை அனைத்தையும் குணப்படுத்துவதாக நம்பிக்கை நிலவுகிறது.
ஆனால், இதற்கு அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை. இதை ஆய்வகத்தில் ஆரோக்கியமாக வளர்க்க முடியாது, இவை காடுகளில் மட்டுமே அரிதாகக் காணப்படும்.
இமயமலையில் பல கிராமங்களில் இந்த மூலிகை சேகரித்து விற்பதே முக்கிய வருமானமாக உள்ளது. அப்படியிருக்கும் நிலையில், சீன ராணுவம் அத்துமீறி நுழைவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.