கட்டைகளுடன் எல்லை தாண்டிய சீன ராணுவம் .. வெறும் கையாலேயே துரத்தி அடித்த இந்திய வீரர்கள்
அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடித்துள்ளனர்.
அடிவாங்கும் சீன வீரர்கள்:
ஏற்கனவே கல்வான் பள்ளத்தாக்கில் அடி வாங்கிய சீன வீரர்கள், தற்போது மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லை பகுதியில் அடி வாங்கி ஓடியுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக் மோதலில் இந்திய எல்லைபகுதியில் அத்துமீறிய சீன ராணுவம் இந்திய ராணுவ வீரர்களிடம் அடி வாங்கி தறி கெட்டு ஓடியது சீன ராணுவம்.
விரட்டி அடிக்கும் இந்திய வீரர்கள் :
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த 9-ம் தேதி நுழைந்தனர் சீனப் படையினர்.
சீன இந்திய எல்லைப்பகுதியில் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்ற ஒப்பந்தம் இருப்பதால், ஆணிகள் பதிக்கப்பட்ட வடிவிலான கட்டைகள்ஆகிய ஆயுதங்களை சிலர் வைத்திருந்தனர்.

இந்த முறை தவாங்கை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதே சீன ராணுவ வீரர்களின் இலக்காக இருந்ததாக கூறப்படுகின்றது.
தொடர்ந்து அடிவாங்கும் சீனா
300 சீன வீரர்கள் அங்கு நுழைந்துள்ளனர். தவாங்குக்குள் வந்த சீனப் படையினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது முதலில் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், உடனடியாக நிலைமையை சுதாரித்துக்கொண்ட இந்திய ராணுவத்தினர், திருப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அவமானத்தில் சீனா :
துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்பதால் துப்பாக்கியை தலைகீழாக பிடித்து சீன வீரர்களின் தலையை இந்திய ராணுவத்தினர் பதம் பார்த்தனர். மேலும், தற்காப்புக் கலை நிபுணர்களாக இருந்த சில இந்திய வீரர்கள், வெறும் கைகளாலேயே சீன வீரர்களை தாக்கி நிலைக்குலையச் செய்துள்ளனர்.

இந்திய வீரர்களின் இந்த அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத சீனப் படையினர் தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து ஓட்டம் பிடித்து தங்கள் எல்லைக்குள் சென்றனர். இந்த பயங்கர மோதலில் இந்திய தரப்பில் 9 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயத்தில், சீனா தரப்பில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் அடி வாங்கி ஓடியிருப்பது சீனாவுக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.