Friday, Jun 27, 2025

கணவரின் ஆவியை திருப்திப்படுத்தனும் - விநோத சடங்கால் ரூ.11 லட்சத்தை இழந்த நபர்!

China Marriage Crime Money
By Sumathi 8 months ago
Report

விநோத சடங்கால் ரூ.11 லட்சத்தை நபர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விநோத சடங்கு

சீனா, தியான்ஜின் பகுதியை சேர்ந்தவர் வாங். இவர் ஆன்லைன் வழியே திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். அப்போது லீ என்ற பெண், தன்னை வசதி படைத்த பணக்கார பெண். தனியாக இருக்கிறேன் என இவரிடம் தெரிவித்துள்ளார்.

marriage bed burning

உடனே, வாங் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். லீ, திருமணத்திற்கு பின்பு எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், முன்னாள் கணவரின் ஆவியை திருப்திப்படுத்த வேண்டியது அவசியம்.

திருமணத்திற்கு முன்பு பெண்ணுக்கு இப்படி ஒரு சடங்கா? வினோத பழக்கம்!

திருமணத்திற்கு முன்பு பெண்ணுக்கு இப்படி ஒரு சடங்கா? வினோத பழக்கம்!

ரூ.11 லட்சம் இழப்பு

அதற்கு திருமண படுக்கையை எரிக்கும் சடங்கு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். முன்னாள் கணவரிடம் இருந்தே தனக்கு அனைத்து சொத்துகளும் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சடங்கிற்கான 1 லட்சம் யுவானை ( இந்திய மதிப்பில் ரூ.11 லட்சம்) செலவிட்டு வாங் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

china

எனவே, வாங் பணம் அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன்பின்னர், லீயை காணவில்லை. அதன்பின்னரே லீ தன்னை நம்ப வைத்து பணமோசடி செய்து விட்டதாக அறிந்து மனமுடைந்துள்ளார்.