எங்கிருந்து யோசிப்பாங்க? கழிவறையில் நீண்ட நேரம் கழித்த ஊழியர்கள் -நூதன தண்டனை கொடுத்த நிறுவனம்!
கழிவறையில் நீண்ட நேரம் கழித்த ஊழியர்களுக்கு நிறுவனம் ஒன்று நூதன தண்டனை வழங்கியுள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீனா
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் லிக்சன் டியான்ஷெங் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில், பணியாற்றும் ஊழியர்கள் கழிவறைக்குச் சென்றுவர நீண்டநேரம் எடுத்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டறியக் கழிவறையில் ஊழியர்களுக்குத் தெரியாமல் ரகசிய கேமிராவை பொருத்தியுள்ளது. அப்போது கழிவறைக்குச் செல்லும் ஊழியர்கள் புகைபிடிப்பது , மொபைல் கேம்களை விளையாடுவது போன்ற செயலில் ஈட்டுப்பட்டுள்ளது தெரியவந்தது.
நூதன தண்டனை
இதனைத் தடுக்கும் வகையில், லிக்சன் டியான்ஷெங் நிறுவனம் கழிவறையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை எடுத்து சுவரில் ஒட்டியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதற்கு ஊழியர்களின் தனியுரிமைக்கு எதிரான மீறல் என கூறி நிறுவனத்திற்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.அதன் பிறகு சில மணிநேரங்களில் புகைப்படங்களை அந்நிறுவனம் அகற்றப்பட்டது.