1மணி நேரத்திற்கு மேயராக பதவியேற்ற பிரபல யூடியூபர் -7 மில்லியன் பார்வைகளைக் கடந்த வீடியோ!
பிரபல யூடியூபர் ஒருவர் பெரு நாட்டில் ஒரு மணி நேரம் மேயராக பதவியேற்ற வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரபல யூடியூபர்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் டாரன் ஜேசன் வாட்கின்ஸ் ஜூனியர் . 20 வயதாகும் இவர் யூடியூப்பில் விடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள். இவரைத் தனது ரசிகர்கள் யூடியூபர் ஸ்பீட் என அழைக்கப்படுகிறார். இவருக்கேன மில்லியன் கணக்கில் பாலோயர் உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்ததால் கூடுதல் பிரபலமானார். இந்த நிலையில், பெரு நாட்டில் லிமா நகரத்திற்கு யூடியூபர் ஸ்பீட் சென்றுள்ளார். அப்போது அவரை கௌரவிக்க ஒரு மணி நேரம் மேயராக நியமித்துள்ளது.
வினோத சம்பவம்
இது குறித்த வீடியோவை தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் சுமார் 4 மணி நேரம் நேரலையில் விடியோவை பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில், பெருவின் அரசாங்க கட்டிடத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. யூடியூபர் ஸ்பீட் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து இருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தனர்.
இதனையடுத்து யூடியூபர் ஸ்பீட் பதிவிட்ட இந்த விடியோ 24 மணி நேரத்தில் 7.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. முன்னதாக அண்மையில் யூடியூபர் ஸ்பீட் பிறந்தநாளுக்கு ரொனால்டோ கேக் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.