இன்றைக்கு happy யா இல்லையா? அப்போ லீவு எடுத்துக்கலாம் - நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!
இன்றைய தினம் சந்தோஷமாக இல்லாத ஊழியர்கள் விடுமுறை எடுத்துக்கலாம் என்று சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
happy யா இல்லையா?
ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், இறுக்கமற்றும் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்த முடியும் என்பதை அறிந்த புத்திசாலியான நிறுவனங்கள் இதற்கு அக்கறை காட்டி வருகின்றனர். இதனால் பணியாளர்களுக்கான பணிச்சூழலை இறுக்கமற்றதாகவும், இலகுவானதாகவும் அவை உருவாக்குக்கின்றனர்.
இந்த நிலையில், Pang Dong Lai என்ற சீன முன்னணி நிறுவனம் ஊழியர்கள் அன்றைய தினம் மகிழ்ச்சியாக இல்லாத பட்சத்தில் பணிக்கு வரவேண்டாம் என்றும், அதற்கென இருக்கும் சிறப்பு விடுப்புகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்காக ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பு விடுமுறை முடிவு செய்துள்ளது. இந்த விடுமுறையை நிர்வாகத்தால் மறுக்கவும் முடியாது என நிபந்தனை வைத்துள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவரான Yu Donglai என்பவர், அனைவருக்கும் மகிழ்ச்சியற்ற தினங்கள் வாழ்க்கையில் உண்டு.
நிறுவனம் அறிவிப்பு
எனவே ஒருவர் மகிழ்ச்சியாக இல்லாதபோது அவரை பணிக்கு வர வற்புறுத்துவது தவறு. அன்றைய தினத்தை விடுப்பாக அனுமதிப்பதன் மூலம் தனது மகிழ்ச்சியை அவரால் மீட்டெடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
நிறுவனத்தின் கொள்கையின்படி, பணியாளர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். வார இறுதி விடுமுறை மற்றும் 30 முதல் 40 நாட்கள் வருடாந்திர விடுப்பு மற்றும் சந்திர புத்தாண்டின் போது 5 நாட்கள் விடுமுறைக்கு உரிமை உள்ளது.
மேலும், நாங்கள் பெரியண்ணனாக இருக்க விரும்பவில்லை. எங்கள் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களின் மூலம் நிறுவனமும் அப்படியே உயரும் என்பதையும் நம்புகிறோம் என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் கூறினர்.