கோடி கோடியாக போனஸை வாரிக்கொடுத்து ஊழியர்களை குஷிப்படுத்திய நிறுவனம்!

China
By Sumathi Feb 01, 2023 08:19 AM GMT
Report

சீன நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு பல கோடிகளை போனஸாக கொடுத்துள்ளது.

சிறந்த வருவாய்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஹெனன் மைன் என்ற நிறுவனம் உள்ளது. கிரேன் போன்ற கனரக வானங்கள் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் இந்த நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, சுமார் 5,100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கோடி கோடியாக போனஸை வாரிக்கொடுத்து ஊழியர்களை குஷிப்படுத்திய நிறுவனம்! | Chinese Company Gives Rs 70 Crore Employee Bonus

நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருவாய் மட்டும் 9.16 பில்லியன் யுவான் (1.1 பில்லியன் டாலர்)ஆக உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கொட்டித் தீர்த்த நிறுவனம்

கொரோனா சமயத்தின்போது கூட நிறுவன வருவாய் உயர்ந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த நிறுவனம் சிறப்பாக பணியாற்றிய மூன்று சேல்ஸ் மேனஜர்களுக்கு மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக கொடுத்துள்ளது.

சிறந்த ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்ட சுமார் 40 பேருக்கு ஒரு மில்லியன் யுவானிற்கு மேலாக போனசாக கொடுத்துள்ளது. அதுபோக பணத்தை எண்ணும் போட்டியையும் ஊழியர்களுக்கு வைத்து இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அதிக தாள்களை எண்ணியவர்களுக்கு தனியாக ஒரு பரிசும் கொடுத்துள்ளது.

இதற்காக மட்டும் 12 மில்லியன் யுவான் தொகையை ஒதுக்கி வைத்துள்ளது மேலும், 30 சதவீத சம்பள உயர்வையும் அளித்து ஊழியர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.