இனி ஒன்றுசேர முடியாது… இயக்குநர் பாலாவை நம்பி பல கோடி இழந்த நடிகர் சூர்யா… - ரசிகர்கள் ஷாக்…!
இயக்குநர் பாலாவை நம்பி பல கோடியை நடிகர் சூர்யா இழந்துள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இயக்குநர் பாலா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவர் ‘நந்தா’, ‘பிதாமகன்’, உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இயக்குநர் பாலாவிற்கு உண்டு.
சமீபத்தில் இயக்குநர் பாலா தன் மனைவி முத்துமலரை விவாகரத்து செய்த சம்பவம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியாக்கியது. கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பாலாவை நம்பி பல கோடி இழந்த நடிகர் சூர்யா
இதனையடுத்து, இந்து ஆண்டு ஆரம்பத்தில் நடிகர் சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணி மீண்டும் இணைந்தது. ‘நந்தா’, ‘பிதா மகன்’ படத்தின் மூலம் சூர்யாவிற்கு அடையாளத்தை தேடி கொடுத்தவர் இயக்குநர் பாலா.
இதனையடுத்து இவர்கள் மீண்டும் ‘வணங்கான்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. ஆனால், திடீரென படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நடிகர் சூர்யா சென்னை திரும்பினார். இது சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சூர்யாவிற்கும், இயக்குநர் பாலாவிற்கும் ஏதோ பிரச்சினை காரணமாக இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாலா ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், இப்படத்தின் கதை சூர்யாவிற்கு பொருத்தமாக இருக்காது என்பதால் சூர்யாவை ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, பதிலுக்கு நடிகர் சூர்யாவும் தங்களின் 2d நிறுவனம் ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ரூ.10 கோடி வரை நஷ்டம்
இந்நிலையில் ‘வணங்கான்’ படத்தை தயாரித்த சூர்யாவிற்கு இப்படத்தினால் கிட்டத்தட்ட ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ஒரு நாள் தவறாமல் அனைவர்க்கும் சம்பளத்தை கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. மேலும், செட் வேலைகள் உட்பட அனைத்தையும் சேர்த்து இப்படத்திற்கு இதுவரை 10 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.