பொதுவெளியில் அதிபர்... வீட்டுக் காவல் புரளிக்கு முற்றுப்புள்ளி!

China Viral Photos
By Sumathi Sep 28, 2022 08:11 AM GMT
Report

 சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு பின் பொதுவெளியில் தோன்றினார்.

 ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட நகரில் செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

பொதுவெளியில் அதிபர்... வீட்டுக் காவல் புரளிக்கு முற்றுப்புள்ளி! | China Xi Jinping Reappears On State Tv Amid Rumors

இதில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு நாடு திரும்பினார். அதன் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. மேலும், எந்த உலகத் தலைவரையும் சந்திக்கவும் இல்லை.

வீட்டுக் காவல்  புரளி

இந்நிலையில், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும் வதந்தி பரவியது. இந்நிலையில் அதிபர் ஜின்பிங் தனது வெளிநாட்டுப் பயணத்துக்கு பிறகு முதல்முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார்.

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் சாதனைகள் தொடர்பாக பெய்ஜிங் நகரில் நடைபெறும் கண்காட்சிக்கு நேற்று அவர் முகக்கவசம் அணிந்து வந்தார். இதன்மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்