சீன அதிபர் ஜி ஜின்பிங் கைதா? - வெளியான அதிர்ச்சி தகவல்

Xi Jinping China
By Irumporai Sep 25, 2022 02:09 AM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அந்நாட்டின் ராணுவம் கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சீன அதிபர் கைது

கடந்த 16ஆம் தேதி, உஸ்பெகிஸ்தான் நாட்டில் எஸ்.சி.ஓ. மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்று திரும்பிய போது, சீன ராணுவம் அவரை கைது செய்து வீட்டு காவலில் வைத்து உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இது குறித்து சமூகவலைத்தளங்களில் பரவி வரும் கருத்தின்படி சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி ஜின்பிங், கட்சி மற்றும் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து வருகின்றனர்.

அவரை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பிலிருந்து, கட்சியின் மூத்த தலைவர்கள் நீக்கி உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.   

மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம்

சீனாவின் அதிபர் பதவியில் ஒருவர் இருமுறை மட்டுமே நீடிக்க முடியும். ஆனால், ஜி ஜின்பிங் மூன்றாவது முறையும் பதவி வகிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியுள்ளது.

இதை கருத்தில் கொண்டும், கொரோனா காலத்தில் சரிவர செயல்படாத காரணத்தாலும் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுப்பிரமணிய சுவாமி

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜி ஜின்பிங்கை நீக்கிவிட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது என்று வதந்தி பரவி வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சர்வதேச அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் எது உண்மை என்று தெரியாமல் மக்கள் குழம்பியுள்ள நிலையில், இவை அனைத்தும் சமூக வலைத்தளத்தில் பரவும் வதந்திகள் என்று தெரியவந்துள்ளது.

சீனாவின் உலக ஊடகமான சிசிடிவி மற்றும் சிஜிடிஎன் - யில் இது வரை அது பற்றிய எந்த செய்திகளும் வெளிவரவில்லை. மேலும் முதன்மையான ஊடகங்களிலும் இது வரை எந்த வித தகவல்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது