வெறும் 3 விநாடி.. மின்னல் வேக புரொமோஷன் - வாரத்திற்கு ரூ.120 கோடி சம்பாதிக்கும் பெண்!
சீன பெண் ஒருவர் புரொமோஷன் மூலம் வாரத்திற்கு ரூ.120 கோடி சம்பாதித்து வருகிறார்.
புரொமோஷன்
சீனாவில் டிக்டாக் என அறியப்படும் `Douyin’-ல் பிரபலமாக இருப்பவர் Zheng Xiang Xiang என்ற பெண். அதில் 5 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்டுள்ள இவர், புரொமோஷன் மூலம் வாரத்திற்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.120 கோடி) ஈட்டுகிறார்.
பல தயாரிப்புகளை புரொமோட் செய்யும் Zheng Xiang Xiang, ஒரு தயாரிப்பை குறித்து பேச 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். தயாரிப்புகளை கேமராவில் காட்டி அதன் விலையை மட்டுமே கூறுகிறார்.
மின்னல் வேகம்
இதன் மூலம் மின்னல் வேகத்தில் தொடர்ச்சியாக 10 வெவ்வேறு தயாரிப்புகளையாவது காண்பித்து விடுகிறார். இந்த பெண் புரொமோஷன் செய்யும் பொருள்களுமே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறியுள்ளனர்.
வாரத்திற்கு ரூ.120 கோடி சம்பாதிக்கும் இந்த பெண்ணின் மின்னல் வேக புரொமோஷன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.