492 அடி உயரம் கொண்ட துபாய் ஃப்ரேம் பற்றி தெரியுமா..? - உள்ளேயே மியூசியம், தியேட்டர் இருக்கு!
துபாய் ஃப்ரேம் மற்றும் அருங்காட்ட்சியகம் குறித்த சுவாரஸ்ய தகவல்.
துபாய் ஃப்ரேம்
உலகிலேயே மிகவும் உயரமான ஃப்ரேம் வடிவக் கட்டடம் என்றால் அது துபாய் ஃப்ரேம்தான். கடந்த 2018-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அதிசய கட்டிடம் 150 மீட்டர் உயரமும் 95 மீட்டர் அகலமும் கொண்டது ஆகும்.
போட்டோ ஃப்ரேம் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தின் ஒரு பக்கத்திலிருந்து எமிரேட்ஸ் டவர், புர்ஜ் கலிஃபா போன்றவற்றின் அழகையும், இன்னொரு பக்கத்திலிருந்து துபாயின் பழமையான நகரத்தைப் பார்க்கலாம்.
கின்னஸ் சாதனைப் படைத்த இந்த செல்வதற்கான நுழைவுக்கட்டணம் ரூ 1,532 ஆகும். மேலும், 1 முதல் 2 மணி நேரம் வரை பார்வையிடலாம். இந்த துபாய் ஃப்ரேமில் ஒரு அருங்காட்ச்சியாகமும் உள்ளது.
அருங்காட்சியகம்
இது, 50 வருடங்கள் கழித்து துபாய் எப்படி இருக்கும் என்பதை கூறும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் 7 தளங்கள் உள்ளன.
அதில் 6 தளங்களில் உள்ள பொருள்கள் மனிதநேயம், ஆரோக்கியம், தெய்வீகம், சுற்றுச்சூழல், காலநிலை, வரலாற்றில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி விண்வெளிக்கு பயணம் செய்தார்கள் போன்றவற்றின் அடையாளமாக இருக்கின்றன.
திரையரங்கம், நாடக மேடை ஆகியவையும் அங்கு உள்ளன.முன்பதிவு செய்துதான் இந்த அருங்காட்சியகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சுற்றிப்பார்க்க இரண்டு மணி நேரம்தான் அனுமதி.