லீவே இல்லாமல் 103 நாட்கள் வேலை - இறுதியில் ஊழியருக்கு நேர்ந்த சோகம்!
விடுமுறை இல்லாமல் 103 நாட்கள் வேலை செய்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறை இல்லை
உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒப்பந்த அடிப்படையில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். அங்கு 103 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்துள்ளார்.
ஊழியர் பலி
இதனால், உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதனை செய்ததில், அவருடைய உறுப்புகள் செயல் இழந்ததாக கூறப்படுகிறது.
தற்போது விடுமுறை அளிக்காமல் வேலை வாங்கியதாக அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதில் 400,000 யென்கள் லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.