No Disturbance - விடுமுறையில் இருக்கும் ஊழியரைத் தொடர்பு கொண்டால் அபராதம்!
விடுமுறையில் இருக்கும் ஊழியரைப் பணி நிமித்தமாக தொடர்பு கொண்டால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரீம் 11
மும்பையைச் சேர்ந்த கம்பெனி 'டிரீம் 11'. இந்நிறுவனம் டி20 கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் எந்த அணி எத்தனை ரன் எடுக்கும் என்பது தொடர்பாக ஆன்லைன் போட்டியை நடத்தியது. பின் அதையே ஒரு விளையாட்டு ஆப்பாக மாற்றி நடத்திவருகிறது.
இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பவித் சேத், கம்பெனி ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒருவாரம் எந்த வித இடையூறும் இல்லாமல் குடும்பத்துடன் விடுமுறையை அனுபவிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
No Disturbance
அதில், "ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வாரம் இந்த வேலையிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்படுவீர்கள். உங்களுக்கு கம்பெனியிலிருந்து போன், இமெயில் என எந்தவித தொந்தரவும் இருக்காது. உங்களுக்கான ஒரு வாரத்தை நீங்கள் செல்லும் இடத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் அனுபவிக்க முடியும்.
ஊழியர்கள் ஓய்வு எடுத்து, தங்களைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டும் வேலைக்கு வரவேண்டும் என்று டிரீம் 11 விரும்புகிறது. ஊழியர்கள் வருடாந்திர விடுமுறையில் இருக்கும் போது கம்பெனியிலிருந்து தொந்தரவு செய்தால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.