அழகானவர்களா? அய்யோ.. தள்ளியே இருங்க..மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாடு!
அழகானவர்களிடம் தள்ளி இருக்க மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரகசியத் தகவல்
சீனா அரசு அழகான ஆண்களையோ, பெண்களையோ சந்திக்கும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனெனில், அவர்கள் வெளிநாட்டு உளவாளிகளாக இருக்கலாம். ரகசியத் தகவலைப் பெறக்கூடிய மாணவர்களை நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கு அவர்கள் வசீகரமாக நடந்துகொள்ளலாம்.
அரசு எச்சரிக்கை
வேலை விளம்பரங்கள், இணை தேடும் இணையத்தளங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு உளவாளிகள் இருக்கின்றனர் என்று தேசியப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒருவரை ஒருவர் நோட்டம் விட ஆள் அனுப்புவதாக மேற்கத்திய நாடுகளும், சீனாவும் அடிக்கடி ஒன்றை மற்றொன்றை குற்றஞ்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.