சீனா, தைவான் இடையில் போர் தொடங்கவுள்ளதா? - மக்கள் பீதி!

China Taiwan
By Vinothini Jun 12, 2023 10:35 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 சீனாவின் போர் விமானங்கள் தாய்வானுக்குள் நுழைந்ததால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

சீனா - தைவான்

இரண்டாம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது. இதனால் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது.

china-war-jets-illegally-entered-taiwan

ஆனால் தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. மேலும், மற்ற நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது. தொடர்ந்து, சீனா தனது ராணுவத்தினரை தைவானை சுற்றி அமைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

போர் விமானம்

இந்நிலையில், சீனா தனது போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் அனுப்பி மிரட்டி வருகிறது. தொடர்நது, நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உள்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்துள்ளது.

china-war-jets-illegally-entered-taiwan

இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.