அடித்து துரத்திய இந்தியா..வீரர்களை கட்டுப்படுத்துங்கள் - அலறிய சீனா!
எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய - சீனா மோதல்
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த 9-ம் தேதி நுழைந்தனர் சீனப் படையினர். சீன இந்திய எல்லைப்பகுதியில் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்ற ஒப்பந்தம் இருப்பதால், ஆணிகள் பதிக்கப்பட்ட வடிவிலான கட்டைகள்ஆகிய ஆயுதங்களை சிலர் வைத்திருந்தனர்.

மேலும், தற்காப்புக் கலை நிபுணர்களாக இருந்த சில இந்திய வீரர்கள், வெறும் கைகளாலேயே சீன வீரர்களை தாக்கி நிலைக்குலையச் செய்தனர். இந்நிலையில், இதுகுறித்து சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சீனா அறிவுரை
கடந்த வெள்ளிக்கிழமை சீன-இந்திய எல்லையில் சீன பக்கத்தில் உள்ள டாங்ஹங் பகுதியில் உண்மை எல்லைக்கோடு பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, இந்திய வீரர்கள் அத்துமீறி எல்லையை கடந்து சீன வீரர்களை தடுத்தனர்.
அந்த சூழ்நிலையை சீனபடைகள் மிகவும் தொழில்முறையில், நிலையான மற்றும் சக்திவாய்ந்த நடவடிக்கை மூலம் எதிர்கொண்டனர். தற்போது அந்த பகுதியில் இருந்து இந்திய-சீன படைகள் விலக்கப்பட்டுவிட்டன.
இந்தியா தங்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கண்டிப்புடன் கட்டுப்படுத்த வேண்டும். எல்லையில் அமைதியை பேண இந்தியா சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.